தஞ்சாவூர், ஜூன் 6- தஞ்சை அருகே விளார் வடக்கு காலனியை சேர்ந்தவர் தர்மராஜ்(67), விவசாயி. இவரது மகன் ஆனந்தபாபு(33), மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராக இருந்தார். புதன்கிழமை காலை அதே பகுதியை சேர்ந்த குமார்(48) மற்றும்அவரது மகன்கள் கோகுல்நாத்(22), கோபிநாத்(21) ஸ்ரீநாத்(18)ஆகியோர் பெரிய பிளாஸ்டிக் தொட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரை பிடித்தனர். இதைப் பார்த்த ஆனந்தபாபு தற்போது தண்ணீர் பிரச்சனைஇருக்கும் நிலையில் இப்படி பெரிய தொட்டியில் தண்ணீர் பிடிக்கலாமா? எனக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து ஆனந்தபாபுவை தாக்கி அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க வந்தஆனந்த்பாபுவின் தந்தை தர்மராஜையும் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து மதியம் ஆனந்தபாபு, அவரது தந்தைதர்மராஜை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி, உறவினர்கள் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆனந்தபாபு வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். தர்மராஜ்தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் குமார், கோகுல்நாத், கோபிநாத் ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.