tamilnadu

img

அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு திருவிடைமருதூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

கும்பகோணம், மே 20-கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட் டால் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் கிராம மக்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவிடைமருதூர் பந்தநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும் பங்கள் வசித்து வருகின்றன. இதில்விவசாய நிலங்களில் கோடை சாகுபடியாக சுமார் 50 கிராமங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.இதில் தொடர் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. அத்துடன்குறைந்த மின் அழுத்த பிரச்சனையால் மின் சாதனங்கள் பழுது ஆகின்றன. இதனால் விவசாயிகள் தங்கள்கோடை நெற்பயிர்களுக்கு பம்புசெட்டு உதவியுடன் தண்ணீர் பாய்ச்சமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்கள் தண்ணீர் இன்றி வாடும் அவலம் ஏற்பட்டுள்ளது. தொடர் மின்தடையால் வர்த்தகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை விடுமுறையில் பள்ளிகுழந்தைகளும் மிகுந்த சிரமத்திற்குஉள்ளாகியுள்ளனர்.இதுகுறித்து பலமுறை விவசாயிகளும், பொதுமக்களும் கும்பகோணம் மின்வாரிய தலைமை அலுவலகம், கோட்டாட்சியர், மாவட்டஆட்சியர் கவனத்துக்கு தெரியப் படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் தொடர்ந்து இப்பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தில் மின் சப்ளை இருப்பதோடு பல நேரங்களில் நீண்ட நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த பந்தநல்லூரை சுற்றியுள்ள 30 கிராம மக்கள் 300 க்கும் மேற்பட்டோர் பந்தநல்லூர் மின்வாரிய இளநிலைபொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தடை இல்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க நடக்க எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும் தொடர்ந்து மின்வெட்டு நீடித்துக் கொண்டே இருக்கிறது.இது குறித்து திருப்பனந்தாள் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சாமிக்கண்ணு கூறுகையில், அறிவிக்கப் படாத மின்வெட்டால் மிகுந்த சிரமத்திற்கு விவசாயிகளும், பொதுமக்களும், வர்த்தகர்களும் ஆளாகிஉள்ளார்கள். ஆகவே உடனடியாகநடவடிக்கை எடுத்து மின் சீராக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், தொடரும் பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.