tamilnadu

img

அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட வலியுறுத்தி மாணவர் மாநாடு

தஞ்சாவூர் நவ.24- அரசுப் பள்ளிகளை பாது காத்திட வேண்டும். 5 மற்றும் 8 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க தஞ்சை மாவட்டக் குழு சார்பில், பள்ளி மாணவர் கோரிக்கை மாநாடு தஞ்சை சிஐடியு அலுவலகத்தில் சனிக்கிழமை காலை நடை பெற்றது.  மாநாட்டிற்கு வி.அர்ஜுன் தலைமை வகித்தார். கே.சிவ கார்த்திக் வரவேற்றார். இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலா ளர் வி.மாரியப்பன் துவக்க உரை யாற்றினார். பள்ளி மாணவ உபக் குழு மாவட்ட கன்வீனர் வி.இராஜா ராம் அறிக்கை முன்மொழிந்தார். மாணவர் சங்க மாவட்ட செயலா ளர் ஜி.அரவிந்தசாமி நிறைவுரை யாற்றினார். உ.சஞ்ச் குமார் நன்றி கூறினார்.  மத்திய, மாநில அரசுகள் ஆசிரியர் காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். பள்ளி களில் குடிநீர், கழிப்பறை உள் ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அதிக கட்டணம் வசூல் செய்யும் தனி யார் பள்ளிகள், அரசு அங்கீகா ரம் இல்லாமல் செயல்படும் தனி யார் பள்ளிகளை மூட வேண்டும். அரசு பள்ளி மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.