tamilnadu

img

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்/கும்பகோணம், பிப்.15- சென்னை வண்ணாரப்பேட்டையில் குடி யுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தஞ்சாவூர் ஆத்துப்பாலம் பள்ளி வாசல் அருகே தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே இடத்தில் இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. எழுத்தாளர் சு.பொ.அகத்தியலிங்கம் கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெ.ஜீவகுமார், பி.செந்தில்குமார், மாவட்டக்குழு சரவணன், என்.சிவகுரு மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாநகரக்குழ உறுப்பி னர் நசீர் கலந்து கொண்டனர். இதில் 40 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மதுக்கூர் கூட்டு சாலையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நகர தலைவர் அபுபக்கர் தலைமையில் ஆர்ப்பாட்டமும், அதிராம்பட்டினத்தில் கல்லூரி முதல் பள்ளிவாசல் வரை கண்டன பேரணியும், மல்லிப்பட்டினம் கடைவீதியில் ஆர்ப்பாட்டமும், செந்தலைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. திருவையாறு அடுத்த நடுக்கடை மெயின் ரோட்டில் நடுக்கடை, முகமது பந்தர் முஸ்லீம் ஜமாத்தார்கள் 100 பேர் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  கும்பகோணத்தில் தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார். மாநில செயலாளர் தாவூத் கைசர் கண்டன உரையாற்றினார். இதில் ஏராள மான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
கும்பகோணம் 
கும்பகோணத்தில் அனைத்து கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கும்பகோ ணம் தஞ்சை சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தார். திருபுவனம் கடைவீதி, நாச்சியார்கோயில் கடைவீதி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  கொரநாட்டுகருப்பூர் கடைவீதியில் மறியல் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் அந்தந்த பகுதியில் உள்ள இஸ்லாமிய கூட்டமைப்பி னர் பங்கேற்றனர். பாபநாசம் அருகே பண்டார வாடை, சக்கராப்பள்ளி ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
மன்னார்குடி 
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியான முறை யில் போராடிய பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.