tamilnadu

img

பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

கும்பகோணம், அக்.19-  தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யம்பேட்டை அருகே உள்ள நல்லிச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அமுதா. இவரது மகள் நந்தகுமாரி அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு வணிகவியல் பாடப் பிரிவில் படித்து வருகிறார். இந்நிலையில் வகுப்பு ஆசிரியர் ஹாலிஸ் என்பவர் மாணவிகளை வகுப்பிலுள்ள டெஸ்க் நாற்காலிகளை எடுத்து அடுக்கும்படி கூறியுள்ளார். அப்போது மாணவி நந்தகுமாரி அதை செய்யாமல் இருந்ததாகவும் ஆசிரியர், மாணவி நந்தகுமாரியை திட்டி வேலையை செய்யச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.  அப்போது சக மாணவிகளை நந்தகுமாரி நண்பர்க ளுக்குள் பேசிக் கொண்டு வேலைகளை செய்தனர். அப்போது அருகில் இருந்த ஆசிரியை ஹாலிஸ் தன்னை திட்டியதாக தெரிவித்து நந்தகுமாரியை அடித்து தன்னுடன் பணியாற்றும் உடற்பயிற்சி ஆசிரியை அழைத்து வந்து மேலும் நந்தகுமாரியை அடித்து துன்புறுத்தினராம். இதனால் மனமுடைந்த நந்தகுமாரி வீட்டில் விஷ மருந்தை குடித்து விட்டு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனை அறிந்த இந்திய மாணவர் சங்க மாவட்ட செய லாளர் அரவிந்த்சாமி உள்ளிட்ட இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக  பாதிக்கப்பட்ட மாணவி நந்தகுமாரியை மருத்துவ மனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி கூறியபோது, இது போன்று ஆசிரியர்கள் மாணவர்களை துன்புறுத்தும் வகையில் அடித்து தற்கொலைக்கு தூண்டியது கண்டிக்கத்தக்கது. கல்வி துறை நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.