தஞ்சாவூர், ஏப்.22-பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழக பொறி யியல் துறையில் பயிலும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 15 மாணவிகள், சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்று, ‘‘எஸ்கேஐ என்எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட்’’ என்ற பலூன்செயற்கைக்கோளை வடிவமைத்தனர். இதனை விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.ஏ.தனராஜ் வரவேற் றார். சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவன முதன்மை செயல் இயக்குநர் ஸ்ரீமதிகேசன், பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினர் வீ.அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இஸ்ரோ மையத்தின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை மாணவிகளின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார். பின்னர் பல்கலைக்கழக மைதானத்திலிருந்து பகல் 11.30 மணிக்கு பலூன் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. இந்த செயற்கைக் கோளானது ஹீலியம் வாயு நிரப்பப் பட்ட பலூனுடன் 70 ஆயிரம் அடி உயரத்தில் வான்வெளிக்கு சென்று அங்குள்ள வெப்பநிலை காரணமாக உருமாற்றம் பெற்று பாராசூட் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து 40 கி.மீட்டர் சுற்றுவட்டா ரத்தில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
ஆனால் இந்த செயற்கைக்கோள் ஒரு லட்சத்து 3 ஆயிரம் அடி உயரம்சென்று, சுமார் நான்கு மணி நேரம்கழித்து தஞ்சாவூர் அருகே சுங்காந் திடல் என்ற கிராமத்தில் வயலில் பாராசூட் மூலம் தரையிறங்கியது. இந்த செயற்கைக்கோள் விண்ணை நோக்கி செல்லும் போதும், கீழே தரையிறங்கும் போதும், அதில் பொருத்தப் பட்டுள்ள கேமரா உதவியுடன் வான்வெளியின் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப நிலை, காற்றின் ஈரப் பதம், அங்குள்ள வாயுக்களின் தன்மை குறித்தும் கண்டறிந்து நூற்றுக்கணக் கான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.இதனுடன் ஜிபிஎஸ் மற்றும் வெப்ப நிலை கணக்கிடும் கருவி மூலம்அட்சரேகை, உயரம், திசை வேகம்ஆகியவற்றை கணக்கிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தியதால் பலூன் செயற்கைக்கோள் எங்கு செல்கிறது என பேராசிரியர்களும், மாணவர்களும் கணினி உதவியுடன் பார்த்துக் கொண்டே இருந்தனர். இந்த நிகழ்வினை ஆசியா புக்ஆப் ரெக்கா ர்ட்ஸ் நிறுவனத்தினர் சாதனையாக பதிவு செய்து கொண்டனர்.