சிஐடியு தஞ்சாவூர் மாவட்டக்குழு அலுவலகத்தில், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் மறைந்த தோழர் ஜெ.நெடுஞ்செழியன் படத்திறப்பு, புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் படத்தினை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.