tamilnadu

தஞ்சாவூர், மயிலாடுதுறை , திருவாரூர் முக்கிய செய்திகள்

பேராவூரணி எம்எல்ஏவுக்கு கொரோனா

தஞ்சாவூர், ஜூலை 23-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு (68). இவருக்கு கடந்த 5 தினங்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து தாமாகவே முன் வந்து தனிமைப்
படுத்திக் கொண்டு, வீட்டில் இருந்து வந்தநிலையில், அவருக்கும், உதவியாளர் மற்றும் குடும்பத்தினருக்கு சளிப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எம்எல்ஏ கோவிந்தராசு, உதவியாளர் கணேசன் (28) இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இரத்ததான முகாம்

தரங்கம்பாடி, ஜூலை 23- மயிலாடுதுறை அடுத்துள்ள மணல்மேட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தோழர் நெல்லை அசோக் நினைவாக இரத்ததான முகாம் மயிலாடுதுறை வட்டச் செயலாளர் ஏ.அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவக்குமார், செயலாளர் சிங்காரவேலன், மயிலாடுதுறை வட்டத்தலைவர் ஏ.பிரகாஷ், பொருளாளர் விஜயபாலன்,  நிர்வாகிகள் ஏ.ஆர்விஜய், ஏ.ராஜேஷ், வட்டக்குழு உறுப்பினர்கள் பாக்யராஜ், செல்வேந்திரன், ஜெகதீசன், குமரேசன் பங்கேற்றனர். முகாமில் 39 பேர் ரத்த தானம் வழங்கினர்.

மாற்று இடத்தில் திடக்கழிவு திட்டம் அரசு ஊழியர்கள் கோரிக்கை

திருவாரூர், ஜூலை 23- திருவாரூர் வட்டம் இளவங்கார்குடி ஊராட்சி பவித்ரமாணிக்கத்தில் அரசு அலுவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொண்டுவருவதற்கு ஊரக வளர்ச்சித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு இப்பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்டஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கப்பட் டது. சங்கத்தின் மாநில செயலாளர் யு.சண்முகம், கூட்டுறவு ஊழியர் சங்க மாநிலதலைவர் எம்.சௌந்தரராஜன், சங்க மாவட்ட தலைவர் எம்.ராஜமாணிக்கம், செயலாளர் வெ.சோமசுந்தரம், துணைத் தலைவர்கள் வி.சிவக்குமார், ஏ.தனபால் ஆகியோர் ஆட்சியரிடம், குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுவது மூலம் மக்கள் நோய்த்தொற்று ஆளாக நேரிடும். எனவே இங்கு வசிக்கும் 600-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் நலன் கருதி மாற்று இடத்தில் இத்திட் டத்தை செயல்படுத்த கேட்டுக் கொண்டனர்.