தஞ்சாவூர், ஜன.19- தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சமத்துவ பொங் கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மருத்துவமனை யில் பணியாளர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டன. வெற்றி பெற்ற பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. முன்னதாக புது மண்பானையில் பச்சரிசி பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்ட னர். அதன் பின்னர் கோ பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. விழா வில் டாக்டர்கள், பணியாளர்கள், புறநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.