தஞ்சாவூர், மே 18- தஞ்சை மாவட்டத்தில், காலதாமத மின்றி, உடனடியாக தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமையில், தஞ்சை ஆட்சியர் ம.கோ விந்தராவை சந்தித்து, பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது, “தஞ்சை மாவட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால், ஜூன் 12 தண்ணீர் திறப்பது தடைபட்டு, விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வந்தது. தற்போது அணையில் போதுமான தண்ணீர் இருப்ப தோடு, தென்மேற்கு பருவமழையும் உரிய காலத்தில் துவங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம், விவசாயப் பணிகளை துரிதப்படுத்தி அனைத்து குறுவை, சம்பா சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்.
ஆறு கள், ஏரி, குளம், வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும். தண்ணீர் திறப்பதற்கு முன்பாக பெரும்பகுதி தூர்வாரப்படுவதே, உதவியாக இருக்கும். மேலும் அனைத்து மதகுகளிலும், குமிழிகளிலும், ஷட்டர், கதவுகள், உடன் பொருத்தப்பட்டு, நீர்ப்பாசனம் தடையின்றி நடைபெற உதவிட வேண்டும். தற்போது குடிமராமத்து பணிகள் துவங்கப்பட உள்ள நிலையில், கடந்த ஆண்டு போ லில்லாமல் முறையாகவும், முழுமையா கவும் பணிகள் நடைபெற உரிய துறைகள் மேற்கொண்டிட, தாங்கள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டும்.
மேலும், நடைபெறுகிற பணிகளில் அந்தந்த பகுதி விவசாயிகள் பங்கேற்பபை ஏற்படுத்திட, விவசாயிகளோடும், விவ சாய சங்க பிரதிநிதிகளோடும் கலந்து ஆலோ சனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை உடனடியாக நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது, காவிரி விவசாயிகள் சங்கம் ரவிச்சந்திரன், கரும்பு விவசாயிகள் சங்கம் கோவிந்தராஜூ, ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.