tamilnadu

img

ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்குக! அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப்.4- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் கோரிக் கைகளுக்கு ஆட்சியாளர்கள் செவி சாய்க்க வேண்டும். ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவக்க வேண்டும். சேவைத் துறையாக செயல்படும் போக்குவரத்து கழகங்க ளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட நிதி நிலை அறிக்கையிலேயே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தஞ்சையில் நகர் மற்றும் புறநகர் கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டங்களில் தொ.மு.ச, விரைவுப் போக்குவரத்து கழகம் தலைவர் ராஜேந்திரன், சிஐடியு தலைவர் முருகன், தஞ்சை நகர தொழிற்சங்கங்களின் ஒருங்கிணை ப்பாளர் என்.குருசாமி, சிஜடியு மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டு வன், கண்ணன், ராமசாமி, காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். அ.போ.வ.கழக சிஐடியு கெளரவ தலைவர் ஆர்.மனோகரன் கோரிக் கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.
அறந்தாங்கி 
இதே போல் அரசு போக்குவ ரத்துத் துறை அனைத்து தொழிற் சங்கம் சார்பாக புதுக்கோட்டை அறந் தாங்கி கிளை பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழி லாளர் முன்னேற்ற சங்க கிளைச் செயலாளர் யோகராஜ் தலைமை வகித்தார். சங்க கிளை தலைவர் கணபதி, துணைச் செயலாளர் சுந்தரம், சிஐடியு எஸ். இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிஐடியு பொருளாளர் டி.சந்தா னம், சிஐடியு க.செல்வராஜ், செந்தில் நாதன், தொ.மு.ச கணபதி, செந்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கி பேசினர்.நிறைவாக முத்துகண்ணு நன்றி கூறினார்.