தஞ்சாவூர், ஆக.3- பூதலூர் மருத்துவமனை யில் 24 மணி நேரமும் மருத்து வர்கள் பணியாற்றவும், அறு வை சிகிச்சை அரங்கம், பிரேத பரிசோதனைக் கூடம் அமைக்க வேண்டும். அனைத்து மருந்துகளும் மருத்துவமனையில் தட்டு ப்பாடின்றி கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். கர்ப்பிணி பெண்கள் அரசு உதவித்தொகை பெற பூத லூர் மற்றும் செங்கிப்பட்டி யில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். கொரோனா பரிசோ தனை வசதி செய்து தர வே ண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திங்கட்கிழமை பூத லூர் அரசு மருத்துவமனை அருகில் கோரிக்கை ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. மாதர் சங்க ஒன்றியத் தலைவர் எஸ். மலர்கொடி தலைமை வகி த்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, ஒன்றியச் செயலாளர் என்.வசந்தா, ஒன்றியப் பொருளாளர் வி.அஞ்சலிதேவி ஆகியோர் கோரிக்கை விளக்க உரை யாற்றினர்.