தஞ்சாவூர், மார்ச் 4- ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட 17ஏ, 17பி உள்ளிட்ட துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட மாறுதல் செய்த அரசு ஊழியர்களை மீண்டும் சொந்த மாவட்டத்தில் பணியமர்த்த வேண்டும். நீதிமன்ற வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் கி.சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வீரமணி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். மகேஷ் கண்டன உரையாற்றினார். ஆணையர்கள் சடையப்பன், தவமணி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய பொறுப்பாளர் பி.திருப்பதி நன்றி கூறினார்.