கும்பகோணம், மார்ச் 11- மத்திய அரசின் மக்கள் விரோத குடியுரிமை திரு த்தச் சட்டத்தை திரும்ப வலி யுறுத்தி தமிழக மக்கள் ஒற்று மை மேடை சார்பில் மார்ச் 17 மற்றும் 18 தேதிகளில் 24 மணி நேர காத்திருப்புப் போரா ட்டத்திற்கு அறைகூவல் விடு த்தனர். அதனையொட்டி தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஆலோசனை கூட்டம் திருபுவனத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சா.ஜீவபாரதி தலைமை வகி த்தார். மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பக்கிரிசாமி நாகேந்தி ரன், சேகர், சொக்கலிங்கம் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் முகமது, ஜான், அப்துல்ரகுமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மார்ச் 17 காலை 10 மணி முதல் 18 காலை 10 மணி வரை 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.