கிருஷ்ணகிரி, ஜூலை 29- அணைக்கு நிலம் கொடுத்த வர்களுக்கு மாற்று இடமும்,. கும்ப ளம் ஊராட்சியில் மலைவாழ், பழங் குடி, இருளர் மக்களுக்கு பட்டா, சாதிச் சான்று, அடிப்படை வசதி கள் கேட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 1இல் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. சூளகிரி ஓராண்டுக்கு முன்பு தனி வட்டமாக அறிவிக்கப்பட்டது. இங்கு கட்டப்பட்டுள்ள வட்டாட்சி யர், வட்ட வருவாய் அலுவலகம் ஓராண்டாகியும் இதுவரை திறக்கப் படவில்லை. இப்பகுதியில் தமிழக அரசு தலித் பழங்குடி, இருளர், மலைவாழ் மக்கள் என 1,500 குடும்பங்களுக்கு வீட்டுமனை, விவ சாய நிலம் வழங்கியது. ஆனால் 67 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. சூளகிரி கும்பளம் ஊராட்சியில் உள்ள சின்னக்குத்தி, எர்ரப்பன்பை யில், பசாநத்தம், சிகரலப்பள்ளி, கிராஸ், ராமன் தொட்டி, முத்த நாயன் போடூர், பெத்தசிகரலப் பள்ளி, கோண திம்மனப்ள்ளி, போடூர் ஆகிய ஊர்களில் வீடு களுக்கு மின் இணைப்பு, தார்ச் சாலைகள், பள்ளிக்கூடம், அங் கன்வாடி, ரேசன் கடை உள்ளது. ஆனால் அந்த பகுதிகளில் ஒருசில வீடுகளுக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. சின்னகொத்தூர், சிகரளப் பள்ளிகேட், நாகமலை, பெரிய குத்தி, கமலகொண்ட கொத்தூர், முனியம் பிரிட்ஜ் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்க ளுக்கு மின் இணைப்பு, பட்டா, ரேசன் கார்டு வழங்கப்படவில்லை. இந்த 14க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்களை அரசே குடியமர்த்தி யது குறிப்பிடத்தக்கது. அதே போல் சூளகிரியிலிருந்து 19 கிலோ மீட்டரில் உள்ள கும்பளம் ஊராட்சி யில் ராமன் தொட்டி, சிகரளப்பள்ளி, பெத்தசிகரளப் பள்ளி தவிர மற்ற பகுதிகளுக்கு குடிநீர் வசதி இல்லை. 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கதவு கூட இல்லா மல் குடிசை வீடுகளில் வாழ்ந்து வரு கிறார்கள். இந்த பகுதிகளுக்கு காலை, மதியம், மாலை என ஒரு டவுன் பேருந்து மட்டுமே இயக்கப் படுகிறது. இதனால் பள்ளி, கல்லூ ரிக்கு செல்லும் மாணவர்கள் பல கிலோ மீட்டர் நடந்தே செல்லும் அவல நிலை உள்ளது. மலை மீது உள்ள நாகமலை குடிசைப் பகுதி யில் சுமார் 60 குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேப்பனப்பள்ளி திமுக சட்ட மன்ற உறுப்பினர் செங்குட்டுவன் நிதியிலிருந்து 2 ஆழ்துளை கைப் பம்புகளும், ஒரு சோலார் தெரு விளக்கும் அமைக்கப்பட்டது. ஆனால் ஓராண்டுக்குள் அவை பழுதடைந்து விட்டன.
இதனால் கடந்த 4 ஆண்டுகளாக குடி நீருக்காக அந்த பகுதி மக்கள் 500 மீட்டர் தூரம் சென்று, 15 அடியில் பள்ளம் தோண்டி அதில் ஊறும் கலங்கிய நீரை எடுக்க வேண்டிய நிலை. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், வட்டாட்சியரிடமும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு கொடுத்த 90 சதம் குடி மனைகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. அதேபோல் 1952இல் கிருஷ்ணகிரி முத்தூர் அணை கட்டுவதற்காக நிலத்தை வீட்டை விட்டுக் கொடுத்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கொட்டா யூர், துரிஞ்சிப்பட்டி, எப்பளம், டேம் எப்பளம், ஏரி எப்பளம், கோவில் எப்பளம் ஆகிய பகுதி களில் அரசால் குடியமர்த்தப்பட்ட னர். ஆனால் 67 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பட்டா வழங்கப்பட வில்லை. இந்நிலையில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் தில்லிபாபு, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலை வர் கோதண்டராமன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்எம்.ராஜு, வட்டச் செயலாளர் முனியப்பா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாம்ராஜ், விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் சி.முனுசாமி, நாகமலை ராஜப்பா ஆகியோர் கொண்ட குழு இந்த பகுதிகளைச் சென்று பார்வை யிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சி யரிடமும், சூளகிரி வட்டாட்சியரிட மும் அந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்று மாறு வலியுறுத்தினர். இங்கு வசிக்கும் பழங்குடி, தலித், மலைவாழ், இருளர் இன குடும்பங்களுக்கும் விவசாய நிலங் களுக்கும் பட்டா, ஜாதிச் சான்று, குடிநீர், சாலை, சுகாதார வசதிகள் செய்து தரக் கோரியும், ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேசன் கார்டு வழங்க வேண்டும், 26 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டிக் கொடுத்த சீரழிந்துள்ள பழைய பசுமை வீடுகளை புதிதாக கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற இருப்பதாக நிர்வாகிகள் கூறினர்.