tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக! சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

சேலம், பிப்.19- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திய போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்திய சம்ப வத்தை கண்டித்தும் சேலம், தரு மபுரியில் இஸ்லாமியர்கள் முற்றுகை போராட்டத்தில் புத னன்று ஈடுபட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டை யில் குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனை வரையும் கைது செய்தனர். இச்சம்ப வத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜமா அத்துல் உலமா  சபை, அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல்  கட்சிகள் இணைந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம்  மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், சேலம் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், மதிமுக ஆனந்த ராஜ், காங்கிரஸ் தலைவர் ஜெயப் பிரகாஷ், அமான் (எ)நாசர்கான் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். இப் போராட்டத்தையொட்டி காவல்  ஆணையாளர் செந்தில்குமார் தலை மையில் ஏராளமான காவல்துறை யினர்குவிக்கப்பட்டிருந்தனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம் ஜமா அத்துல் உலமா சபை, தருமபுரி சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங் களின் சார்பாக என்பிஆர், என் ஆர்சி, சி.ஏ.ஏ குடியுரிமை சட்டத்தை கண்டித்து தருமபுரி பாரதிபுரம் 60 அடி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தரும புரி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை செயலாளர் மௌலவி ஹபிபுல்லாஹ் ஹஜ்ரத் தலைமை வகித்தார்.  இதில், 500க்கும் மேற்பட்டவர் கள் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான முழக்கங்கள் எழுப்பினர்.