tamilnadu

img

குளம் தூர்வாரும் பணி ஆய்வு 

 தஞ்சாவூர், ஆக.22- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் கால்வாய் கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருவதை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு துணைச் செயலாளருமான ஜெயசந்திர பானு ரெட்டி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புனல் வாசல் ஊராட்சியில், ஆதனகுளம் வடிகால் வாரி தூர்வாரும் பணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பத்துக்காடு ஊராட்சியில் கரிசவயல் வாய்க்கால் தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பகுதி பணிகளை நேரில் பார்வையிட்டு மண் எடுக்கப்பட்டுள்ள அளவு குறித்து ஆய்வு செய்தார்.  தூர்வாரும் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வரு கிறது. பணிகளை முறையாகச் செய்ய வேண்டும். கடைமடைப் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் சென்று சேருவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் இரு தினங்களுக்கு முன் பட்டுக்கோட்டை சார்ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜிடம் கோரிக்கை மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.