tamilnadu

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் புதிய கொரோனா வார்டுகளில் ஆய்வு

தஞ்சாவூர், ஜூன் 29- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக கொ ரோனா வார்டுகள் அமைக்கப்பட உள்ளன. கொ ரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் வேளையில் தமிழகத்தில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக ரித்து வருகிறது. இதனால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக கொ ரோனா வார்டுகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வார்டில் புதிய படுக்கை வசதிகள் ஏற்படு த்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஞாயிற்றுக்கி ழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டால், அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் இருக்கிறதா என்ப தையும் ஆய்வு செய்து அதன் செயல்பாடுகள்  குறித்து கேட்டறிந்தார்.