தஞ்சாவூர், அக்.3- தஞ்சாவூர் மாவட்டத்தில் மூடிக் கிடக்கும் நெல் கொள்முதல் நிலை யங்களை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முது நிலை மண்டல மேலாளர் அலு வலகத்தை முற்றுகையிட்டு விவசா யிகள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக குறுவை சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்ப ட்டுள்ளதை, உடனடியாக திறக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மழையி லும், பனியிலும் அறுவடை செய்யப்பட்ட நெல் பயிர் நனைந்து, வீணாகி வருவதாக கூறி விவசாயிகள் கோரிக்கை விடுத்தும், உரிய நடவடிக்கை இல்லாததால், திருவை யாறு வட்டம் வரகூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், நெல் மூட்டைகளுடன் வந்து நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவ ட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி, நிர்வாகிகள் கே.மதியழகன், எம்.ராம், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்த்சாமி, அமமுக நிர்வாகி வில்லி மற்றும் திரளான விவசாயிகள் நெல்லை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர். இதையடுத்து நுகர்பொருள் வாணி பக் கழக மண்டல கொள்முதல் பிரிவு துணை மேலாளர் பன்னீர்செல்வம் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன டியாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.