தஞ்சாவூர், மே 7- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோ னா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த வர், தனது மனைவி கர்ப்பிணி யாக இருந்ததால் கடந்த 3 ஆம் தேதி சென்னையிலி ருந்து குடும்பத்துடன் சொந்த ஊரான களத்தூர் வந்துள்ளார். இதையடுத்து சுகாதாரத் துறையினர் கடந்த 4 ஆம் தேதி அவரது மனைவி, குழந்தை, உற வினர் ஒருவர் ஆகியோரின் ரத்த, சளி, மாதிரிகள் எடுத்து அனுப்பினர். இதில் ஆண் ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மற்றவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட வர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பேராவூரணி வட்டத்தில் ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.