tamilnadu

img

பட்டுக்கோட்டை நகராட்சியில் பணியின் போது கை துண்டிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குக! ஜூன் 25-ல் சிஐடியு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 20- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு  வெள்ளிக்கிழமை அன்று மாலை சிஐ டியு - உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில்  வாயிற்கூட்டம் நடைபெற்றது.  சங்க துணைத் தலைவர் செல்லத் துரை தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கோ ரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி யச் செயலாளர் எஸ்.கந்தசாமி, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கம்  சக்திவேல், உள்ளாட்சி ஊழியர் சங்க  நிர்வாகிகள் சின்னப்பிள்ளை, செல்வம்  மற்றும் நகராட்சி தூய்மைப் பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்  குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் கூறுகையில், “பட்டுக்கோட் டை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு தற்காலிகப் பணியாளரான ரேவ தியை, குப்பை தரம் பிரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தி உள்ளனர்.

இதில் வியாழக்கிழமை மதியம் இயந்தி ரத்தில் சிக்கி அவரது கை துண்டிக் கப்பட்டுள்ளது. 3 மணி நேரம் அங்கேயே  ஆபத்தான நிலையில் கிடந்த ரேவ தியை பார்க்க ஆணையர் உள்ளிட்ட அதி காரிகள் வராதது கண்டனத்துக்குரியது.  தற்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வரும் அவருக்கு உயர் சிகிச்சை  அளிக்க வேண்டும். அவருக்கு இழப்பீ டாக ரூ.10 லட்சம், அவரது குடும்பத்தில்  ஒருவருக்கு நிரந்தர அரசுப்பணி வழங்க  வேண்டும்.  எவ்வித பாதுகாப்பு உபகரணங்க ளும் வழங்காமல், அபாயகரமான பணி யில் ஈடுபடுத்திய நகராட்சி ஆணையர்  சுப்பையா, இளநிலை பொறியாளர் தங்க துரை ஆகியோர் மீது, அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மரியாதைக் குறைவான வார்த்தைகளால் திட்டு வதை கைவிட வேண்டும். கொரோனா  காலத்திற்கு தூய்மைப் பணியாளர்க ளுக்கு, சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். ஆபத்தான காலகட்டத்தில், பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணி யாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு செய்ய வேண்டும்.  இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 25 (வியாழக்கிழமை) பட்டுக் கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு  கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும்”  என்றார்.