tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே திரும்ப பெற்றிடுக! அனைத்துக் கட்சி கையெழுத்து இயக்கம்

தஞ்சாவூர், பிப்.2- குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய வற்றை திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் தமிழகம் முழு வதும் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. அதனொரு பகுதியாக தஞ்சை யில் நடைபெற்ற கையெழுத்து இயக் கத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். திமுக மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டப் பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே. ஜி.நீலமேகம், திமுக நிர்வாகிகள் செல்வம், காசி மேத்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் கோ. நீலமேகம், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, நசீர், கரிகாலன், காங்கிரஸ் கட்சி டி.ஜி. ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செய லாளர் உதயகுமார், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஐ.எம்.பாதுசா, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிறைவாக நகர திமுக நகரத் துணைச் செயலாளர் நீலகண்டன் நன்றி கூறி னார்.  தஞ்சை பேராவூரணியில் நடை பெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்ப ழகன் தலைமை வகித்தார். நகரச் செய லாளர் தனம் கோ.நீலகண்டன் முன் னிலை வகித்தார். திமுக மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.  பேரூராட்சி முன்னாள் தலைவர் என்.அசோக்குமார், திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், முன்னாள் ஒன்றியச் செய லாளர்கள் சுப.சேகர், என்.சேகர், திமுக தலைமைக் கழக பேச்சாளர் அப்துல் மஜீத், மாணவர் அணி ஆரோ.அருள், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் சாஞ்சி ரவிச்சந்திரன், ஒன்றியச் செய லாளர் குறிச்சி மணிவாசகன், நகரச் செயலாளர் குமார், விடுதலைச் சிறுத் தைகள் மோட்ச குணவழகன், மைதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எஸ்.ஜகுபர்அலி மற்றும் தோழமைக் கட்சியினர், பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்
கரூர் நகரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, பள்ளப் பட்டியில் திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி, க.பரமத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் கே.கந்தசாமி, தோகைமலையில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர், வேலாயுதம்பாளையத்தில் இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரத்தினம், வெள்ளியணை யில் மதிமுக மாவட்ட செயலாளர் கபினி சிதம்பரம், வாங்கலில் விசிக மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகி யோர் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி.ஜீவானந்தம், பி.ராஜு, எம்.ஜோதி பாசு, பி.இலக்குவன், கே.சக்திவேல், கே.வி.பழனிச்சாமி, சண்முகம், ராஜா முகமது, பிரபாகரன், பழனிவேலு மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாகவும், கடை வீதிகளில் பொதுமக்களிடம் கையெ ழுத்து வாங்கினர். மாவட்டம் முழு வதும் 21 இடங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தரங்கம்பாடி
நாகை மாவட்டம் இலுப்பூர் சங்க ரன்பந்தலில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் கையெ ழுத்து இயக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் அப்துல் அஜீஸ் தலைமை யில் நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் வரவேற்பு ரையாற்றினார்.  முன்னாள் எம்.எல்.ஏ அருட்செல் வன், மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செயலா ளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், டி.இராசை யன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஜி.ராஜேந்திரன், ஒன்றிய துணை தலை வர் மைனர் பாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணை செயலாளர் ஆயப்பாடி முஜிபு ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் அமீர் நூருல்லா, பொறையார் திமுக நகர செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கவுன்சிலர் சகிலா அஜீஸ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கே.எஸ்.எஸ் கரு ணாநிதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர். கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் பி.சீனிவாசன், முன்னாள் ஊராட்சி தலைவர் அப்துல் அஜீஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர். உத்திரங்குடி ஊராட்சி தலைவர் லெனின் மேஷாக் நன்றி கூறினார்.