tamilnadu

கொரோனா நிவாரணம் கோரி  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூலை 6- கொரோனா கால நிவாரணமாக விவசாயத் தொழிலாளர்க ளுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயத்  தொழிலாளர் சங்கத்தின்(சிபிஐ) பேராவூரணி ஒன்றியக்குழு சார்பில், பேராவூரணி பெரியார் சிலை அருகில் திங்கள்கி ழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  விதொச மாவட்டத் துணைச் செயலாளர் வி.ராஜமா ணிக்கம், ஒன்றியச் செயலாளர் ஏ.கருப்பையா, டி.பழனி யப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம் ஆர்ப்பா ட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். சிபிஐ ஒன்றியச் செய லாளர் கோ.பன்னீர் செல்வம் நிறைவுரையாற்றினார்.