தஞ்சாவூர், ஜூலை 2- தஞ்சாவூர் மாவட்டம் மதிமுக பேராவூரணி ஒன்றியக் கழகத்தின் சார்பில், உதயசூரியபுரம் கடைவீதியில் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இலவச முகக் கவசம், ஹோமியோபதி நோய்த்தடுப்பு மருந்து (ஆர்சனிக்கம் ஆல்பம்-30) ஆகியவை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேராவூரணி நகர அவைத் தலைவர் பி.எஸ்.அப்துல்லா தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மதிமுக பேராவூரணி ஒன்றியச் செயலாளர் குறிச்சி மணிவாசகம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.