tamilnadu

img

பணியின் போது விபத்தில் இறந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி: இழப்பீடு கேட்டு சிபிஎம் - பொதுமக்கள் போராட்டம்

தஞ்சாவூர், ஆக.22-- மின்கம்பங்கள் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இறந்த ஒப்பந்த தொழிலாளிக்கு இழப்பீடு கேட்டு மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உறவி னர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி னர்.  தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மின்வாரியத்தை சேர்ந்த பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், கடந்த 19 ஆம்  தேதி தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் இருந்து மின்கம்பங்களை டிராக்டரில் ஏற்றிச் செல்லும் போது, தஞ்சை பைபாஸ் சாலையில் டிராக்டர் கவிழ்ந்தது.  இதில், ஒப்பந்த ஊழியரான இளங்காடு மேலத்தெரு மதியழகன் என்பவர் மகன் விஜ யகாந்த் (30) சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தார். அதே ஊரைச் சேர்ந்த கிரு ஷ்ணமூர்த்தி (30), அஜித்குமார் (20) படுகா யமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தஞ்சை தாலுகா காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

சிபிஎம் போராட்டம் 
இந்நிலையில் விஜயகாந்த் மின்வாரிய  பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்து ள்ளார். எனவே அவருடைய குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்ப த்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வே ண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால் தலைமையில் போரா ட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே.அபிமன்னன் உட்பட பலர் முழக்கங்களை எழுப்பினர்.  இதையடுத்து இரண்டு நாட்களாக விஜயகாந்த் உடல் சவக் கிடங்கில் இருந்த நிலையில், எதையும் கண்டு கொள்ளாமல், இறந்து போனவர் மின்வாரிய ஊழியரே இல்லை என்று சொல்லி வந்த மின்வாரிய நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் வேலு மணி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், தஞ்சை ஊரக காவல் துணை  கண்காணிப்பாளர் சீத்தாராமன், வட்டாட்சி யர் வெங்கடேஷன், மின் வாரிய உயர் அதி காரிகள் பங்கேற்றனர்.  பேச்சுவார்த்தை முடிவில், ‘உடனடியாக இறுதிச்சடங்கு செலவுகளுக்காக ரூ.20 ஆயி ரம் வழங்கப்பட்டது. மேலும், இறந்தவர் குடு ம்பத்துக்கு மின்வாரியத்தின் மூலம் அதிகபட்ச மாக இழப்பீடு பெற்றுத் தரப்படும். காயமடை ந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்ப டும்’ என உறுதி அளிக்கப்பட்டது. இதைய டுத்து உடற்கூறாய்வு முடிந்து, உறவினர்க ளிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.  சிபிஎம், சிஐடியு, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் எஸ்.ரா ஜாராமன் ஆகியோரின் பெரும் முயற்சி கார ணமாக பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய ப்பட்டுள்ளது.