தஞ்சாவூர், அக்.26- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த சித்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். கி.மு மூன்றாம் நூற்றாண்டு பழமையான சித்தன்ன வாசல், 1800 ஆண்டுகளுக்கு முன் ஓடும் நீரில் சிமெண்ட் இன்றிக் கட்டப்பட்ட கல்லணை, தஞ்சாவூர் சரபோஜி நூல் நிலையம், 1100 ஆண்டுகள் பழமையான செங்கல், சிமென்ட், மரங்கள் பயன்படுத்தப்படாமல் வடிவமைக் கப்பட்ட தஞ்சை பெரிய கோவில் இவைகளை மாணவர்க ளுக்கு நேரடியாக காட்டி, அதன் சிறப்புகளை விளக்கி கற்பிக்கப்பட்டது. இதன் மூலம் நமது தொன்மையும், உலகளாவிய அளவில் தமிழரின் சிறப்பும் மாணவர்களால் உணரப்பட்டது.பள்ளித் தலைமையாசிரியர் பால சண்முக வேலன், தொன்மைப் பாதுகாப்பு மன்றப் பொறுப்பாளர் மஞ்சுராணி, பசுமைப் படைப் பொறுப்பாளர் போத்தி யப்பன் ஆகியோர் மாணவர்களைத் வழிநடத்தினர்.