districts

மாற்றுத்திறன் சிறார்களுக்கான கல்விச் சுற்றுலா

புதுக்கோட்டை, ஜன.24- புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், மாற்றுத்திறனுடைய இளம் சிறார்களுக்கான கல்வி சுற்றுலா வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செவ்வாய்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  மனவளர்ச்சி குறைபாடுடைய மற்றும் செவித்திறன் குறைபாடுடைய இளம் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களுடன், தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களான, தஞ்சை பெரியகோவில், அரண்மனை, சிவகங்கை பூங்கா ஆகிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து ஒருநாள் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சிறார்களுடன் கலந்துரையாடி, கல்வி சுற்றுலா வாகனத்தினை துவக்கி வைத்தார். இந்த பயணத்தில் 35 இளம் சிறார்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என மொத்தம் 70 பேர் சென்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் பி.முத்துச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.