tamilnadu

img

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மார்ச் 2- குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வெ.சேவையா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதி காரம்மாநில பொருளாளர் காளி யப்பன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனா புரம் சி.முருகேசன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் கோ. திருநாவுக்கரசு, மனித நேய மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் பாதுஷா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெய்னு லாப்தீன், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.