தஞ்சாவூர் அக்.5- மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில், பாவ்கேதி கிரா மத்தை சேர்ந்த ரோஷனி பால்மிகி (12), அவினாஷ் பால்மிகி (10), ஆகிய தலித் சமூகத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களும், அங்குள்ள பஞ்சாயத்து கட்டிடத்துக்கு முன்பு திறந்தவெளியில் மலம் கழித்த தாகக் கூறி, தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிராக செயல்பட்ட தாக, சில தினங்களுக்கு முன்பு வன் கொடுமையாளர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்தும், குற்ற வாளிகளை கைது செய்து தண்டனை அளிக்க வேண்டும். அங்குள்ள ஏழை, கிராமப்புற, தலித் மற்றும் பிற்படுத் தப்பட்ட அனைத்து மக்களுக்கும் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தஞ்சை ரயிலடியில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீ.ஒ.முன்னணி மாவட்டத் தலைவர் கே.அபிமன்னன் தலைமை வகித் தார். தீ.ஒ.முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் என்.சிவகுரு, மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாநில துணைத் தலைவர் எம்.சின்ன துரை ஆகியோர் சிறப்புரையாற்றி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் எம்.மாலதி, பி.செந்தில்குமார், கே.அருளரசன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரவணன், மாந கரச் செயலாளர் என்.குருசாமி, தீ.ஒ.முன்னணி மாவட்ட நிர்வாகி கள் பி.எம்.இளங்கோவன், பி. சத்தியநாதன், வடிவேலன், ஏ.கருப்பு சாமி, மாதர்சங்க மாவட்டத் தலை வர் கலைச்செல்வி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல் ஏசுராஜ், சிஐடியு நிர்வாகிகள் பி. முருகன், செங்குட்டுவன், ராமசாமி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அப்துல் நசீர் உள்ளிட் டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.