tamilnadu

img

மத்திய பாஜக அரசின் அடக்குமுறை உரிமை பறிப்புச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தஞ்சாவூர், திருவாரூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.6- மத்திய பாஜக அரசின் அடக்கு முறை, உரிமை பறிப்பு சட்டங் களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழு விய கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  அதனொரு பகுதியாக தஞ்சா வூர் ரயிலடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் என்.குருசாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் தஞ்சை எம்.மாலதி, அம்மாபேட்டை ஏ. நம்பிராஜன், பூதலூர் தெற்கு சி. பாஸ்கர், திருவையாறு ஏ.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கட்சி மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம் கண்டன உரையாற்றி னார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் வெ.ஜீவகுமார், பி.செந்தில் குமார், என்.வி.கண்ணன், என்.சுரேஷ்குமார், எஸ்.தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநி லச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. அபிமன்னன், என்.சரவணன், எம்.பழனி ஐயா, எம்.ராம், எஸ்.ராஜன், கலைச்செல்வி, மாநகரக்குழு உறுப்பினர்கள் சி.ராஜன், எல்.துரை, எம்.கோஸ்கனி, ஹெச்.அப் துல் நசீர், எம்.வடிவேலன், சி.ராமு, இ.வசந்தி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.  தேசிய பாதுகாப்பு சட்டம், முத்த லாக் சட்டம், தேசிய நதிநீர் சட்டம், தேசிய மருத்துவ சட்டம், தொழிலா ளர் உரிமை பறிப்பு சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை மத்திய பிஜேபி அரசு நிறைவேற்றியுள் ளதைக் கண்டித்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கும்பகோணம்
இதே போல் கும்பகோணம் காந்தி பார்க் முன்பு கட்சியின் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் தலைமை வகித்தார். திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சா. ஜீவபாரதி திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனி வேல் மாவட்ட குழு உறுப்பினர் நாக ராஜன் பக்கிரிசாமி குடந்தை நகர செயலாளர் செந்தில்குமார் குடந்தை ஒன்றிய செயலாளர் பி. ஜேசுதாஸ் திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாமிக்கண்ணு பாப நாசம் ஒன்றிய செயலாளர் காதர் உசேன் மற்றும் நகர குழு ராஜகோபா லன் அன்புமணி மாதர் சங்க நகர பொறுப்பாளர் சுமதி செல்வம் சுமதி செந்தில் குமார் உள்ளிட்ட ஏராள மான கட்சியினர் கலந்து கொண்ட னர்.

திருத்துறைப்பூண்டி 
கட்சியின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரக்குழு மற்றும் தெற்கு ஒன்றியக்குழு சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் நகர செயலாளர் கே.ஜி.ரகு ராமன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு சி.ஜோதிபாசு கண்டன உரையாற்றினார்.  மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.சாமி நாதன், எம்.பி.கே.பாண்டியன், நக ரக்குழு ஆர்.எம்.சுப்பிரமணியன், கே.கோபு, கு.வேதரெத்தினம், எஸ். தண்டபாணி, எம்.ஜெயபிரகாஷ், ஏ.கே.செல்வம், ஜெ.பாப்பம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.என்.தங்கராசு, டி.எஸ்.மணியன், ஆர்.மதியழகன், வி.ரவி, என்.வீராச்சாமி, எஸ்.பவானி, ஏ.கே. வேலவன் உள்பட 50-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

குடவாசல்
குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.லட்சுமி தலைமை ஏற்று கண்டன உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வெகுஜன அமைப்பினர் கலந்து கொண்டனர். வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.இராதா தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் கண்டன உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.  கட்சியின் கொரடாச்சேரி ஒன்றி யம் சார்பாக வெட்டற்றுப்பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செய லாளர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி கண்டன உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.