தஞ்சாவூர், பிப்.2- பாபநாசம் பகுதியில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் நடைபெறும் முறை கேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு வலியுறுத்தி உள்ளது. பாபநாசத்தில் நடைபெற்ற இக்கூட்டத் திற்கு, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் சீனி வாசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செய லாளர் பி.எம்.காதர் உசேன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் சிறப்புரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.விஜயாள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் அலைக் கழிக்கப்படுகிறார்கள். பாபநாசம் வட் டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதமாக இருக்கிறது. நெல் பழமாக இருக்கிறது. கருக்காய் இருக்கிறது. சாக்கு கள் இல்லை என சாக்குப் போக்கு சொல்லி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யாமல் இழுத்தடித்து வருகின்றனர். வியாபாரிகளிடமிருந்து மட்டும் மூட்டை, மூட்டையாக கொள்முதல் செய்யப்படு கிறது. கடுமையான முயற்சி செய்து, பாடு பட்டு விளைவித்து, நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென் றால், விவசாயிகளிடம், மூட்டைக்கு ரூபாய் 30, 40 என லஞ்சமாக கேட்டு நிர்பந்தம் செய் கின்றனர். இந்த தொகையையும், முன்கூட் டியே கொடுத்தால் தான் நெல் எடுத்துக் கொள்கிறார்கள். நேரடி நெல் கொள்முதல் நிலையங்க ளின், நடவடிக்கையால் விவசாயிகள் பெரி தும் பாதிக்கப்படுகிறார்கள். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மை யாக கண்டிக்கிறது. மாவட்ட நிர்வாகம் உட னடியாக தலையிட வேண்டும். நெல்கொள் முதல் முறையாக நடைபெறவும், வியாபாரி களிடம் கொள்முதலை தவிர்த்து, விவசாயி களிடமிருந்து நிபந்தனைகள் இன்றி கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடிமனைப் பட்டா கேட்டு மனு கொடுத்து உள்ள பயனாளிகள் அனை வருக்கும் அரசாணை 318 இன் படி உடன் வகை மாற்றி பட்டா வழங்கவும், மாற்று இடங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வலியுறுத்து கிறோம். அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கப் படும் அவலம் இருப்பதாக பொதுமக்களால் பரவலாக கூறப்படுகிறது. எனவே, காவல் துறை அதிகாரிகள் உடனடியாக நட வடிக்கை எடுத்து இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்டன.