தஞ்சாவூர் ஜூலை.25- தஞ்சாவூர் மா வட்டம் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் சிஐடியு மணல் மாட்டு வண்டி தொழி லாளர்கள் பேரவை நடை பெற்றது. திருக்காட்டுப்பள்ளி கரி காலன் திருமண மண்ட பத்தில் நடைபெற்ற பேர வை கூட்டத்திற்கு அண்ணா துரை, சந்திரசேகர் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலா ளர் சி.ஜெயபால், முறை சாரா தொழிலாளர் சங்க மாவ ட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட ச்செயலாளர் என்.வி.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச்செயலாளர் சி.பாஸ்கர், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, அனைத்து வகை மாற்றுத்தி றனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமை களுக்கான சங்க மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பேரவையில் பூதலூர் வடக்கு ஒன்றிய மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க தலை வராக ஆர்.அண்ணாதுரை, செயலாளராக பி.குமார், பொ ருளாளராக ஆர்.கலிய மூர்த்தி, துணைத் தலை வர்களாக என்.குமார், எம்.சீனிவாசன், பாஸ்கர், கே. பழனி, ஆர்.பாலசுப்பிர மணியன், துணைச் செய லாளர்களாக சி.கரிகாலன், குணசேகரன், கார்த்தி, ஆர்.மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பூதலூர் தெற்கு ஒன்றிய மணல் மாட்டு வண்டி தொழி லாளர்கள் சங்க தலைவராக ஆர்.சந்திரசேகரன், செய லாளராக எஸ்.இமானுவேல், பொருளாளராக கே.மோ கன்குமார், துணைத் தலை வராக டி.பாலகிருஷ்ணன், துணைச் செயலாளராக கோவிந்தராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக மாவட்டக்குழு உறுப்பினர் இ.எம்.சுல்தான் நன்றி கூறினார். பேரவைக் கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேர வை கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பழனி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால், முறை சாரா தொழிலாளர் சங்க மாவ ட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி, மீன்பிடித் தொழி லாளர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். ரமேஷ் உள்ளிட்ட மாட்டு வண்டி தொ ழிலாளர்கள் கலந்து கொண்ட னர். கூட்டத்தில், “லாரி மற்றும் கனரக வாகனங்கள் மூலம் மணல் கொள்ளை நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கொள்ளிடம் ஆற்றிலும், அக்கினி ஆறு உள்ளிட்ட காட்டாறுகளில் மாட்டு வண்டி தொழி லாளர்கள் மணல் அள்ளி பிழைப்பு நடத்த, தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும். இதனை வலியுறுத்தி, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜூலை 30 செவ்வா ய்க்கிழமை அன்றும், பூத லூர் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு ஆகஸ்ட் 5 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று மணல் மாட்டு வண்டி தொ ழிலாளர்கள் சார்பில் பெரு ந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெறும் சிஐடியு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.