அறந்தாங்கி, அக்.6- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்ட மின்சார வாரிய தொழிலாளர்கள் சிஐடியு சங்க அறந்தாங்கி பேரவைக் கூட்டம் ஞாயிறு அன்று அறந்தாங்கி மின்வாரிய அலு வலகம் அருகே நடைபெற்றது. இந்த பேரவை கூட்ட த்திற்கு விஜயகுமார் தலைமை வகித்தார். புதிய நிர்வாகி கள் தேர்வு நடைபெற்றது கோட்ட தலைவராக எஸ்.பழனி முத்து, செயலாளராக த.விஜயகுமார், துணைத் தலைவராக எம்.அறிவழகன், துணைச் செயலாளராக க.விஜயகுமார் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மின்வாரிய மாவட்ட திட்ட செயலாளர் கு.நடராஜன், மாவட்ட தலைவர் கலியபெரு மாள் மாவட்ட துணைத் தலைவர் கு.செல்வராஜ், மாவட்ட பொருளாளர் ஆர்.ஆறுமுகம் ஓய்வு பெற்ற பி.ஆவுடை முத்து ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.