tamilnadu

மருத்துவ மாணவர்கள் 19 பேர் இடைநீக்கம்

தஞ்சாவூர், ஏப்.11-ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட தஞ்சை மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி இளநிலை மருத்துவம் நான்காம் ஆண்டு மாணவர்கள் 4 பேர் மற்றும் 5 பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட 19 பேர் கல்லூரி விடுதியில் இருந்து புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "விடுதியில் தங்கிய மாணவர்கள் சிலர் தொடர்ந்து மது அருந்துவது, தகராறு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து பல முறை எச்சரிக்கை செய்யப்பட்டும் மாற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கல்லூரி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 19 பேரையும் மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.