tamilnadu

img

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஹாலேப் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 2-வது சுற்று ஆட்டம் நிறைவடைந்துள்ளது.  மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிரடிக்குப் பெயர் பெற்றவரும், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளவருமான ருமேனியாவின் ஹாலேப், தரவரிசையில் இல்லாத அமெரிக்காவின் டவுன்சென்ட்டிடம் 6-2, 3-6, 6-7(4-7) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.   மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கஜகஸ்தானின் யூலாவிடம் 3-6, 6-7(3-7) என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறினார்.  ஆடவர் பிரிவில் முன்னணி வீரர்கள் யாரும் அதிர்ச்சி தோல்வியை ருசிக்க வில்லை. சனியன்று மூன்றாவது சுற்று ஆட்டம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.