tamilnadu

img

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

நியூயார்க்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆடவர் ஒற்றையர் 
ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், போட்டித் தரவரிசையில் இல்லாத பல்கேரியாவின் டிமிட்ரோவை எதிர்கொண்டார். வழக்கம் போல முதல் செட்டிலேயே ஆதிக்கம் செலுத்திய பெடரர் அந்த சேட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டை டிமிட்ரோ 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுக்க ஆட்டம் சூடுபிடித்தது. 3-வது செட்டை பெடரரும் (6-3), 4-வது செட்டை டிமிட்ரோவும் (6-4) கைப்பற்ற, ரசிகர்கள் இமைகள் அசையாமல்  இருக்கையில் அமராமல் நின்று கொண்டே போட்டியை ரசித்தனர். வெற்றியை நிர்ணயிக்கும் டை-பிரேக்கர் செட்டில் டிமிட்ரோ திடீர் உத்வேகத்துடன் அதிரடி சர்வீஸ்களுடன் பெடரரை நடுங்க வைத்தார். டிமிட்ரோவின் துல்லியமான சர்வீஸை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறிய பெடரர் கடைசி செட்டை 6-2 என்ற கணக்கில் இழந்தார். இறுதியில் டிமிட்ரோவ் 3-6, 6-4, 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஜோகோவிச் காயத்தால் விலகியதால் பெடரர் கோப்பையைக் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கத்துக்குட்டி வீரரிடம் வீழ்ந்தது டென்னிஸ் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.  

மகளிர் ஒற்றையர் 
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உள்ளூர் நாயகியும் நட்சத்திர வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ், சீனாவின் வாங்கை 6-1, 6-0 என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்து காலிறுதிக்கு முன்னேறினார். செரீனாவுக்கு இது 100-வது வெற்றியாகும்.