tamilnadu

img

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஓய்வு பேறுவதாக அறிவிப்பு

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் 2020-ஆம் ஆண்டுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தியா சார்பில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே டென்னிஸ் வீர‌ர் என்ற சாதனை படைத்தவர் லியாண்டர் பயஸ். கடந்த1991-ஆம் ஆண்டு முதல் இந்தியா சார்பில் டென்னிஸ் விளையாட ஆரம்பித்த பயஸ், 2020-ஆம் ஆண்டில் தனது 30வது வருடத்தில் காலெடுத்து வைக்கிறார். இவர் இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும், 10 முறை மற்ற தொடர்களில் இரட்டையர் பிரிவு பதக்கங்களையும் வென்றவர். இதுதவிர 66 முறை கோப்பைகளையும், 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றவர். தற்போது 46 வயதாகும் இவர், தனது ஓய்வு குறித்து டிவிட்டரில் அறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், வரும் 2020-ஆம் ஆண்டில் சில போட்டிகளில் மட்டும் பங்கேற்க உள்ளதாகவும், சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.