ஹைதராபாத், ஜூன் 21- ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனையில் பணியாற்றும் பொது மருத்துவத் துறை முதுகலை மருத்துவர்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப் பட்ட மற்றும் அவசரகால சிகிச்சைகளை அவர்கள் மேற்கொள்ள மறுத்துவிட்டனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலை யில் நோயாளிகளை கவனித்துக்கொள்வதற்கு அதிகமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மருத்துவமனையின் உள்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். போதுமான அளவிற்கு சுகாதார ஊழியர் கள் நியமிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உஸ்மானியா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் உத்தரவு ஒன்றை வெளி யிட்டார், அதில், பொது அறுவை சிகிச்சை, மயக்க மருந்து, டி.வி.எல், எலும்பியல், நரம்பியல், இருதயவியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, உட்சுரப்பியல் உள்ளிட்ட ஒன்பது துறைகளைச் முதுகலை மருத்து வர்கள் பொது மருத்துவத் துறையில் பணியாற்ற வேண்டுமென கூறியுள்ளார். இந்த உத்தரவை முதுகலை மருத்துவ மாணவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். தொற்றுநோய்கள் சட்டத்தின்படி உஸ்மானியா மருத்துவமனை கொரோனா மருத்துவமனை அல்ல. எந்த நோயாளியாவது தங்கள் மேற்பார்வையின் கீழ் இறந்தால் மருத்துவ-சட்டசிக்கல்கள் எழக்கூடும், ஏனெ னில் பொது மருத்துவம் அல்லாத முதுகலை மருத்துவ மாணவர்கள் பொதுவான மருத்துவ நோயை சமாளிப்பதற்கான பயிற்சிகளை பெறவில்லை எனக்கூறப்படுகிறது.