தலைமை இயக்குநர் தகவல்
சென்னை, ஜன.17- 2025 ஆம் ஆண்டுக்குள் கப்பல்களின் எண்ணிக் கையை 200 ஆக அதிக ரிக்கப்படும் என்று இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் கூறி யுள்ளார். இந்தியா-ஜப்பான் கட லோர காவல் படையின் கூட்டுப்பயிற்சி சென்னை யில் நடந்து வருகிறது. இதற்காக ஜப்பான் நாட்டின் கடலோர காவல் படையைச் சேர்ந்த ‘ஏசிக்கோ’என்ற கப் பல் 13 ஆம் தேதி சென்னை துறைமுகத்தை வந்த டைந்தது. இந்த கப்பலில் அதிகாரி கள் மற்றும் வீரர்கள் 60 பேர் வந்துள்ளனர். கப்பலின் கேப்டன் ‘கொய்சோகர்டா’ தலைமையில் இரு நாட்டு கப்பல்படை வீரர்களும் நடுக்கடலில் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டனர். இதில் டார்னியர் ரக விமானங்கள், இருநாட்டு கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் பங்கேற் றன.
கடலில் விழுந்தவர்களை தேடுதல், மீட்பு ஒத்திகை, சரக்கு கப்பலில் ஏற்படும் தீ விபத்துக்களை கட்டுப்ப டுத்துவது குறித்து ஒத்திகை யில் செய்து காண்பிக்கப் பட்டது. அப்போது இந்திய கட லோர காவல்படை தலைமை இயக்குநர் நடராஜன், செய்தி யாளிடம் கூறுகையில், “இந்திய கடலோர காவல் படையில், ஆரம்பத்தில் 45 கப்பல்களும், 40 விமா னங்களும் இருந்தன. இது தற்போது 145 கப்பல்கள், 62 விமானங்களாக அதிக ரித்துள்ளது. இதை தவிர்த்து ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் 50 கப்பல்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக வும், விமானங்களின் எண் ணிக்கையை 100 ஆகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது” என்றார்.