சென்னை,ஜன.16- குஜராத் உயர்நீதிமன்ற முன் னாள் தலைமை நீதிபதி பி.ஆர் கோகுலகிருஷ்ணன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், திராவி டர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகி யோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி யாகவும், குஜராத் உயர்நீதிமன்றத் தின் தலைமை நீதிபதியாகவும் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஆர். கோகுலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமா னார். அவருக்கு வயது 93. கோகுல கிருஷ்ணனின் இறுதி நிகழ்ச்சிகள் மயிலாப்பூர் இல்லத்தில் நடை பெறுகிறது.
நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ் ணன் மறைவு குறித்து திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில், மறைந்த நீதியரசர் கோகுல கிருஷ்ணன் பல முக்கியத் தீர்ப்பு களை வழங்கியவர். சட்ட நுணுக்கங் களில் மட்டுமின்றி சமூக நலப் பணி களிலும் மிகுந்த ஆர்வமிக்கவராக விளங்கியவர் என குறிப்பிட் டுள்ளார். தி.க. தலைவர் கி.வீரமணி, “பெரி யார், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் பேரன்புக்கும், மதிப்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த வர். ஒரு காலத்தில் திராவிடர் இயக் கத்திற்காக வாதாடுவதற்கு வழக்கு ரைஞர்கள் கிடைக்காத காலத்தில், முன்னோடியாக நின்று துணிவுடன் நடத்தி வரலாறு படைத்தவர். அவரை இழந்து வாடும் அவ ரது குடும்பத்தினர், மருத்துவர் பி.ஆர்.ஜி.சிவராமன், அவரது வாழ்விணையர், அவரது சம்பந்தி யும் திமுக பொதுச்செயலாளர் பேரா சிரியர் க.அன்பழகன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்க லையும், ஆறுதலையும் தெரிவித்தி ருக்கிறார்.