சென்னை,ஜன.3- சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை யில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியா வில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அள வுக்கு உயர்ந்து ஒரு பவுன் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இதனால் நகை வாங்குபவர்கள் கவலை அடைந்தனர். அதன் பிறகு தங்கத் தின் விலை படிப்படியாக குறைவதும் பின்னர் சிறிது உயர்வதுமாக இருந்தது.
இந்நிலையில் புத்தாண்டையொட்டி சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்தது. சென்னை யில் வியாழனன்று (ஜன.2) ஒரு கிராம் ரூ.3736-க்கும், ஒரு பவுன் ரூ. 29 ஆயிரத்து 888-க்கும் விற்பனையானது. வெள்ளியன்று(ஜன.3) ஒரே நாளில் கிரா முக்கு ரூ.57 உயர்ந்து ரூ.3,793 ஆகவும், பவுனுக்கு ரூ.456 உயர்ந்து ரூ.30,344 ஆகவும் அதிகரித்துள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு தங்கத்தின் விலை மீண்டும் ரூ.30ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.50.40-ல் இருந்து 70 காசுகள் உயர்ந்து ரூ.51.10-க்கு விற்பனை யாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.50 ஆயிரத்து 400-லிருந்து ரூ.700 அதிகரித்து ரூ.31 ஆயிரத்து 400-க்கு விற்கப்படுகிறது. ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்தது. இதன் தாக்கம் தங்கத்தின் விலையிலும் ஏற்றத்தை உருவாக்கியுள்ளது. இன்னும் 10 நாட்களில் பொங்கல் பண்டிகை வர இருப்ப தால் தங்கம் விலை இனி குறைய வாய்ப் பில்லை எனவும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.