சென்னை, நவ. 7- சென்னையிலிருந்து பிற மாவட்டங்க ளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில் திருக்குறள் இடம் பெறவில்லை என்றும் சில பேருந்துகளில் திருக்குறள் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்க ளில் இயக்கப்படும் பேருந்துகளில் திருக்குறள் அச்சிடப்பட்டு உள்ளது. 1968 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை, அனைத்து அரசு பேருந்து களிலும் திருக்குறள் அச்சிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து அரசுப் பேருந்து களிலும் திருக்குறள் இடம் பெற்றன. திருக்குறளின் அருமையை பொதுமக்கள், அரசு ஊழியர்கள் தெரிந்து கொள்ள இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அரசுப் பேருந்துகளில் திருக்குறள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சில அரசு பேருந்துகளில் திருக்குறள் அகற்றப் பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது. சென்னையிலிருந்து திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கும் மற்றும் புதுச்சேரிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் திருக்குறள் இடம் பெற வில்லை என்றும் சில பேருந்துகளில் திருக் குறள் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டுள்ள தாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். அதே போல் திருவண்ணாமலை, புதுச்சேரிக்கு புதிதாக இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்துகளிலும் திருக்குறள் இடம் பெறவில்லை என்றும் தெரிவித்தனர்.
ஆனால் இதை அதிகாரிகள் தரப்பில் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “சென்னை கோயம்பேடு மற்றும் கே.கே.நகரில் இருந்து விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பேருந்து களில் பராமரிப்பு பணி காரணமாக திருக்குறள் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து விழுப்புரம் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் முத்துகிருஷ்ணன் கூறும்போது, அனைத்து பேருந்துகளிலும் திருக்குறள் இடம் பெற்றுள்ளது. இதுவரை திருக்குறள் அகற்றப்பட்டதாக எந்த புகா ரும் வரவில்லை” என்றார்.