tamilnadu

img

‘தீக்கதிர்’ இரா.நாராயணன் மறைவு அனைத்துக்கட்சித் தலைவர்கள் அஞ்சலி

மதுரை, பிப்12- இந்திய மாணவர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் தீக்கதிர் நாளிதழின் முதல் செய்தி யாளராகவும், துணையாசிரியராகவும் பணியாற்றிய தோழர் இரா.நாராயணன் செவ்வாயன்று காலமானார். அவரது இறுதி நிகழ்வு புதனன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக அவரது உடலுக்கு தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வி.பரமேசு வரன், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச்  செயற்குழு உறுப்பினர்கள் க.கனக ராஜ்,  எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மத்திய பகுதிக்குழு செயலாளர் ஜீவா, புற நகர் மாவட்டச் செயலாளர் சி.ராம கிருஷ்ணன், தேனி மாவட்டச் செயலா ளர் டி.வெங்கடேசன், சிவகங்கை மாவட்டக்குழு சார்பில் ஆர்.கே. தண்டியப்பன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாநி லக்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, க.சுவாமிநாதன், தீக்கதிர் மேலா ளர் ஜோ.ராஜ்மோகன், மதச்சார்பற்ற  ஜனதாதளம் மாநிலப் பொதுச்செய லாளர் க.ஜான்மோசஸ், அகில இந்திய பார்வர்டு தலைவர் பி.வி.கதிரவன், வல்லரசு பார்வர்டு பிளாக் தலை வர் பி.என்.அம்மாசி, மணியம்மை மழலையர் பள்ளி தாளாளர் பி.வரத ராசன், மதிமுக தொழிற்சங்கத் தலைவர் மகபூப்ஜான், தேசியவலிமை நிர்வாகி சுவாமிநாதன், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் சார்பில் ராஜபூபதி, தமிழர்  தேசிய முன்னணி சார்பில் வெ. கணேசன், திமுக சார்பில் இராஜேந் திரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர், புறநகர், தேனி, சிவ கங்கை மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள், பல்வேறு வெகுஜன அரங்கங் களின் நிர்வாகிகள், தலைவர்கள் உட்பட ஏராளமானோர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தி னர். தொடர்ந்து மதுரை மத்தியப் பகுதிக்குழு உறுப்பினர் பி.ஜீவா தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அனைத்துக்கட்சித் தலை வர்கள் நாராயணனுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல்

தோழர் ‘தீக்கதிர்’ இரா.நாராயணன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  தோழர் இரா. நாராயணன், இந்திய மாணவர் சங்கத்தை உருவாக்கிய ஸ்தா பகத் தலைவர்களில் ஒருவர்; 1968ல் கல்கத்தாவில், நாட்டின் பல்வேறு பகுதி களில் செயல்பட்டுக் கொண்டிருந்த முற்போக்கு மாணவர் சங்கங்களை இணைத்து இந்திய மாணவர் சங்கத்தை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மாணவர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் பங்கேற்று அக்குழுவில் இடம்பெற்றவர்; மேற்குவங்கத்தின் மக்கள் தலைவர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினருமான பிமன்பாசு, மூத்த தலைவர் நேபாள் தேவ் பட்டாச் சார்யா, கேரளத்தில் மூத்த தலை வர் சி.பாஸ்கரன் உள்ளிட்ட தலைவர்க ளோடு இணைந்து 1970ல் திருவனந்த புரத்தில் நடைபெற்ற முதலாவது அகில இந்திய மாநாட்டில் இந்திய மாணவர் சங்கத்தை துவக்கிய தலைவர்களுள் ஒருவர் இரா.நாராயணன் என புகழாரம் சூட்டியுள்ளார்.   அவசர நிலைக்காலத்தில் தீக்கதிர் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தோழர் நாராயணன், மதுரையில் தேசபக்தியும் பாட்டாளி வர்க்கத்தின் மீதான மாறாத பற்றும் கட்சி மீது அர்ப் பணிப்புமிக்க பிடிப்பும் கொண்ட  குடும்பம் ‘முன்னணி’ ராமசாமி - சீதா லெட்சுமி அம்மாள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்; தோழர் நாராயணன் மற்றும் குடும்பத்தினர் முழுவதும் கட்சியின் ஊழியர்களாக முன்னணித் தோழர்களாக பணியாற்றுவது பெரு மிதத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ள ஜி.ராமகிருஷ்ணன், தமிழகத்தில் பத்திரி கையாளர் மத்தியிலும் நன்மதிப்பு பெற்ற தோழராக அவர் இறுதிமூச்சுவரை செயல்பட்டு வந்தார் என்றும் புக ழஞ்சலி செலுத்தியுள்ளார்.