இது மகாராஷ்டிர மாநில அவலம்
மும்பை, மே 9- ஆந்திரா மாநிலத்தில், அண்மையில் மது பானக் கடைகளைத் திறந்த ஜெகன்மோகன் ரெட்டி அரசு, மதுப்பிரியர்களுக்கு டோக்கன் வழங்குதல் மற்றும் வரிசையை ஒழுங்கு படுத்தும் பணிகளில் பள்ளி ஆசிரியர்களை நியமித்து, பரபரப்பை ஏற்படுத்தியது. இது விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், உத்தவ் தாக்கரே முதல்வ ராக இருக்கும் மகாராஷ்டிர மாநிலம், ஒரு படி மேலே போய், கல்லூரி பேராசிரியர் களை மதுபானக் கடைகளில் பணியமர்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.
இங்குள்ள அகோலா மாவட்டம், முர்தி சபூர் பகுதி மதுபானக் கடைகளின் ஒருங்கி ணைப்பாளர்களாக கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்த ரவை முர்திசபூர் வட்டாட்சியர் பிரதீப் பவார் என்பவர் பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக, அதிகாலையில் கண்விழித்து 8 மணிக்கெல்லாம் மதுபானக் கடைகளுக்குச் செல்லும் பேராசிரியர்கள். வரிசையில் நிற்கும் மதுப்பிரியர்களிடம் சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்க வலியுறுத்து தல், ஐந்து பேருக்கு மேல் கூடாமல் பார்த்துக் கொள்ளுதல், எவரும் எச்சில் துப்பாமல் கவ னித்துக் கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.