tamilnadu

img

விஜய் சேதுபதியின் அடுத்த படம் லாபம்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது, இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை புறம்போக்கு என்கிற பொதுவுடைமை திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

`லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சுருதி ஹாசன் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின்படப்பிடிப்பு இன்று ராஜபாளையத்தில் துவங்கியது. .