திரையரங்கு உரிமையாளர்கள் இனிவரும் காலங்களில் வசூல் தொகையை விநியோகிஸ்தர்களுக்கு பிரித்து கொடுப்பது குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகர்கள் படங்களின் வசூல் என்பது எப்போதும் அதிக அளவில் இருக்கும். அதை வைத்து விநியோகஸ்தர்கள் தங்களுக்கு என்று பெரிய ஷேர் ஒன்றை பெறுவார்கள்.
இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் இனிவரும் காலங்களில் வசூல் தொகையை விநியோகிஸ்தர்களுக்கு பிரித்து கொடுப்பது குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு முதல் வாரத்தில் ஏ சென்டரில் 60% தொகையும் மற்ற சென்டரில் 65% தொகையும் வழங்கப்படும். இதே நடிகர்களின் படங்களுக்கு இரண்டாவது வாரத்தில் ஏ சென்டரில் 55% தொகையும் மற்ற சென்டரில் 60% தொகையும் வழங்கப்படும்
மேலும் சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்களுக்கு முதல் வாரத்தில் ஏ சென்டரில் 55% தொகையும் மற்ற சென்டரில் 60% தொகையும் வழங்கப்படும். இதே நடிகர்களின் படங்களுக்கு இரண்டாவது வாரத்தில் ஏ சென்டரில் 50% தொகையும் மற்ற சென்டரில் 55% தொகையும் வழங்கப்படும்மற்ற நடிகர்களுக்கு முதல் வாரத்தில் அனைத்து சென்டர்களுக்கும் 50% தொகையும் இரண்டாவது வாரத்தில் 45% தொகையும் மற்ற சென்டரில் 60% தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி நடிகர்களான கமல், விக்ரம், கார்த்தி, விஷால் போன்ற நடிகர்கள், மற்ற நடிகர்களின் பட்டியலில் வந்துள்ளனர்