tamilnadu

img

இராமநாதபுரத்திற்கு விமான நிலையம் வேண்டும்

மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி கோரிக்கை

இராமநாதபுரம், டிச.15- இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் விமான நிலையம் அமைக்கவேண்டுமென மக்களவை உறுப்பி னர் நவாஸ்கனி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை குளிர்காலத் தொடரில் அவர் பேசியதாவது:- இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட இராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதிலிருந்து மக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். சுற்றுலாத் தலங்கள் நிறைந்த மாவட்டம் இது. வணிக ரீதியாக இந்தியப் பொருளாதாரத்திற்கு இராமநாதபுரம் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறது. துபாய் , சவுதி அரேபியா, ஹாங்காங், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிடையே வணிக ரீதியான தொடர்பு கொண்ட மாவட்டம் இராமநாதபுரம். பருத்தி, மிளகாய் மற்றும் கடல் உணவு வணிகத்திலும் முக்கியப் பங்குவகிக்கிறது.  மதுரை விமான நிலையத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு 200 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக பயணம் செய்ய வேண்டி இருக்கி றது. வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள், தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பிராந்திய விமான இணைப்பு திட்டத்தின் கீழ் (UDAN Scheme)   இராமநாதபுரத்தில்   விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.