புதுதில்லி, மே 21-முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவு தினம் மே 21 செவ்வாயன்று அனுசரிக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி.செவ்வாயன்று தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்திய காங்கிரஸ் தலைவரும் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல்காந்தி. “என் தந்தை நாகரிகமானவர், கனிவானவர், அன்பானவர். அவர்அன்பையும், மரியாதை கொடுக்கும் பண்பையுமே எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். யாரையும் வெறுக்கச் சொல்லவில்லை. மன்னிக்கவே கற்றுக் கொடுத்திருக் கிறார். அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.பிரியங்கா காந்தி தனது ஃபேஸ்புக் பகக்த்தில் தன் தந்தை ராஜீவ் காந்தியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘என் ஹீரோ என் அப்பா’ என்று குறிப்பிட்டுள்ளார்.