tamilnadu

img

சினிமா படப்பிடிப்பில் ராட்சத கிரேன் விழுந்து 3 பேர் பலி

சென்னை,பிப்.20-  சென்னை அருகே சினிமா படப்பிடிப்பில் ராட்சத கிரேன் விழுந்து 3 பேர் பலியாகினர்.  இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப் படத்தின் படப்பிடிப்பு சென்னை செம்பரம்பாக்கத்திலுள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் புதன்கிழமையன்று இரவு நடை பெற்றது. இதில் சண்டைக்காட்சிக்காக பயன் படுத்தப்பட்ட  ராட்சத கிரேன் எதிர்பாராத விதமாக சாய்ந்து விழுந்தது.

இதில் கிருஷ்ணா என்ற உதவி இயக்குநர், படப்பிடிப்பில் உதவியாளர்களாகப் பணி யாற்றி வந்த மாது, சந்திரன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோத னைக்காக கொண்டு செல்லப்பட்டன. காய மடைந்த 10 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனைக்குச் சென்ற நடிகர் கமல், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தை ஏற்படுத்திய தலைமறைவாகி யுள்ள ஆப்பரேட்டர் ராஜனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் லைக்கா நிறுவனம் படப் பிடிப்பு தளத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும் இணை இயக்குநர் பரத்குமார் சார்பில் காவல்துறை யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.