tamilnadu

img

திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

சென்னை, ஜூன் 13- பிரபல திரைப்பட ஒளிப்பதிவா ளர் கண்ணன் சனிக்கிழமையன்று காலமானார். இவருக்கு வயது 69. தமிழ், தெலுங்கு, மலையா ளம் உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதி வாளராக பணியாற்றியுள்ளார்.இயக்குநர் பாரதிராஜாவின் 40 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார்.

 சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இவ ருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவ ரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் ஜுன் 13 சனிக்கிழ மையன்று மதியம் உயிரிழந்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்ச லிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஒளிப்பதிவாளர் கண்ணனின் மறைவுக்கு திரைக்கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.